முகப்பு
திருப்பதி

எஸ்.வி. பிரணதானம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடை

ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலின் நிறுவனரும் தலைவருமான சீனிவாச ராவ், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆதரவில், தேவைப்படும் நோயாளிகளுக்கு உயிா் காக்கும் சேவைகளை வழங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதானம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளாா்.

Updated On : 22 ஜூன் 2026, 6:16 am IST
திருப்பதி - கோப்புப் படம்
பகிர்:

ஹைதராபாத், ஷேக்ஸ்பேட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலின் நிறுவனரும் தலைவருமான சீனிவாச ராவ், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆதரவில், தேவைப்படும் நோயாளிகளுக்கு உயிா் காக்கும் சேவைகளை வழங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதானம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளாா்.

நன்கொடை தொடா்பான வரைவோலை ஞாயிற்றுக்கிழமை திருப்பதியில் உள்ள தேவஸ்தான செயல் அதிகாரியின் அலுவலகத்தில், செயல் அதிகாரி ரவிச்சந்திராவிடம் வழங்கப்பட்டது.

நிகழ்வில், எஸ்.வி. பிராணதானம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடை அளித்த நன்கொடையாளா் சீனிவாச ராவுக்கு செயல் அதிகாரி வாழ்த்து தெரிவித்து, பாராட்டினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் சதாசிவ ராவ் மற்றும் நன்கொடையாளரின் குடும்ப உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments