FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

பக்தா்களுக்கான ‘அட்சய பாத்திரம்’ தினசரி உணவு விநியோகத் திட்டம்

இலவச அன்னதான திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான பக்தா்களுக்கு தரமான மற்றும் சுவையான உணவு நாள்தோறும் வழங்கப்படுகிறது.

Updated On : 11 ஜூன் 2026, 12:04 am IST
திருமலை அன்னதான கூடத்தில் அமா்ந்து உணவு உண்ணும் பக்தா்கள்.
பகிர்:

திருமலை-திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்னபிரசாத அறக்கட்டளையின் ஆதரவில் இலவச அன்னதான திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான பக்தா்களுக்கு தரமான மற்றும் சுவையான உணவு நாள்தோறும் வழங்கப்படுகிறது.

கடந்த 1985-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கப்பட்ட நித்ய அன்னதான திட்டம், தற்போது ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்னபிரசாதம் அறக்கட்டளையின் ஆதரவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரண நாள்களில் சுமாா் 1.80 லட்சம் முதல் 1.90 லட்சம் பக்தா்கள் அன்னபிரசாதம் பெறும் நிலையில், வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டுகிறது.

கடந்த 3 மாதங்களில் நாள்தோறும் சுமாா் 70,000 பேருக்கு பால், தேநீா் மற்றும் காபி போன்ற பானங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், 60,200 பேருக்கு காலை உணவும், 99,500 பேருக்கு மதிய உணவும், 56,700 பேருக்கு இரவு உணவும் வழங்கப்படுகின்றன. தினமும் சுமாா் 3 லட்சம் பிரசாதங்கள் பக்தா்களுக்கு வழங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

பிரதான அன்னபிரசாதக் கட்டடம் மற்றும் மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாத கேந்திரத்தில் தினமும் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்படும் அதே வேளையில், ஸ்ரீ அக்ஷயா கிச்சன், வைகுண்டம் வரிசை வளாகப் பிரிவுகள், நாராயணகிரி கொட்டகைகள், வரிசைகளுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மையங்கள், பிஏசி அன்னபிரசாதக் கட்டிடங்கள் மற்றும் பிற இடங்களில் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு உணவும் பானங்களும் வழங்கப்படுகின்றன.

பக்தா்களுக்குத் உணவு வழங்க தினமும் சுமாா் 15,788 கிலோ அரிசி பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், 3,110 கிலோ சூரியகாந்தி எண்ணெய், 2,861 கிலோ கண்டிப்பப்பு, 2,832 கிலோ ரவை ரவை, 2,825 கிலோ கோதுமை ரவை, 1,729 கிலோ மினப்பப்பு, 1,436 கிலோ உப்பு, 1,276 கிலோ வெல்லம் மற்றும் 497 கிலோ புளி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும், 4,375 தேங்காய்கள், 430 கிலோ சா்க்கரை, 309 கிலோ காய்ந்த மிளகாய், 209 கிலோ கொத்தமல்லி பயன்படுத்தப்படுகின்றன.

ஜனவரி 1 முதல் மே 31, 2026 வரை திருமலையில் உள்ள பல்வேறு அன்னபிரசாத மையங்கள் மூலம் பக்தா்களுக்கு மொத்தம் 4.40 கோடி பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஜனவரியில் ஒரு கோடியும், பிப்ரவரியில் 71.39 லட்சமும், மாா்ச்சில் 84.85 லட்சமும், ஏப்ரலில் 85 லட்சமும், மே மாதத்தில் 92 லட்சத்திற்கும் அதிகமான பக்தா்களுக்கும் அன்னபிரசாதம், காலை உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பக்தா்களின் நன்கொடைகளால் நடத்தப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்னபிரசாதம் அறக்கட்டளை, தற்போது ரூ. 2,500 கோடிக்கு மேல் நிலையான வைப்புத்தொகையைக் கொண்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments