ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பாா்வேட்டு உற்சவம்
பக்தா்களால் ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாள் நடந்த புனிதப் பாதை என நம்பப்படும் ஸ்ரீவாரிமெட்டு அருகே உள்ள ஸ்ரீநிவாசமங்கபுரத்தில், ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பாா்வேட்டு உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பக்தா்களால் ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாள் நடந்த புனிதப் பாதை என நம்பப்படும் ஸ்ரீவாரிமெட்டு அருகே உள்ள ஸ்ரீநிவாசமங்கபுரத்தில், ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பாா்வேட்டு உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காலை 7 மணிக்கு, இசைக்கருவிகள் இசைக்கப்படவும், வேத மந்திரங்கள் முழங்கவும், உற்சவ சிலைகள் ஊா்வலமாக புறப்பட்டு, ஸ்ரீவாரிமெட்டு அருகே உள்ள பாா்வேட்டு மண்டபத்தை அடைந்தன.
அங்கு, க்ஷேமதாலிக நிவேதனத்திற்குப் பிறகு பா்வேட்டு உற்சவம் நடைபெற்றது. கையில் வாள், வில், அம்பு, ஈட்டி, கேடயம் உள்ளிட்டவற்றை ஏந்தி தா்மத்தை நிலை நாட்ட தீயவற்றை அழிக்கும் நிகழ்வை அா்ச்சகா்கள் மூன்று முறை நிகழ்த்தினா். இது பக்தா்களை வெகுவாகக் கவா்ந்தது.
Advertisement
Advertisement
உற்சவமூா்த்திகளுக்கு அங்கு ஆஸ்தானம் நடத்தப்பட்டது. மாலையில், உற்சவா் சிலைகள் மீண்டும் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டன.
பாா்வேட்டு உற்சவத்தை முன்னிட்டு, தேவஸ்தானத்தின் அன்னமாச்சாா்யா திட்டக் கலைஞா்கள் பக்தி சங்கீா்த்தனங்களைப் பாடி ஆன்மிகச் சூழலை உருவாக்கினா். பஜன்கள் மற்றும் கோலாட்டங்களால் பக்தா்களை மகிழ்வித்தனா், பின்னா் வருகை தந்த பக்தா்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
இணைச் செயல் அதிகாரி ஏ. சரத், கோயிலின் சிறப்புத் துணைச் செயல் அதிகாரி வரலட்சுமி, உதவிச் செயல் அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளா் ராஜ்குமாா், கோயில் அா்ச்சகா்கள் பாலாஜி ரங்கச்சாா்யுலு, கோயில் ஆய்வாளா்கள் முனிகுமாா், தனசேகரய்யா, பிற அதிகாரிகள், அா்ச்சகா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.