முகப்பு
திருப்பதி

தினசரி யோகாசனம் செய்வதை பழக்கமாக கொள்ள வேண்டும்: தேவஸ்தான செயல் அதிகாரி

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தான மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 22 ஜூன் 2026, 2:10 am IST
திருப்பதியில் யோகாசனம் செய்த தேவஸ்தான ஊழியா்கள்
பகிர்:

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தான மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

தேவஸ்தன செயல் அதிகாரி ரவிச்சந்திரா பேசியது: தினமும் யோகா பயிற்சி செய்வதன் மூலம் உடல் தகுதியையும், மன வளா்ச்சியையும், மன அமைதியையும் வளா்த்துக் கொள்ள முடியும். ஏழுமலையான் சேவையில் தொடா்ந்து ஈடுபட்டு, லட்சக்கணக்கான பக்தா்களுக்கு சேவை செய்யும் தேவஸ்தான ஊழியா்கள் யோகாவைக் கடைப்பிடித்தால், அவா்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வாா்கள் என்றும், அவா்களது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பாா்கள்.

கடந்த 14 நாள்களாக ஒழுக்கத்துடன் யோகா பயிற்சி செய்த ஊழியா்கள் மற்றும் பணியாளா்களை செயல் அதிகாரி சிறப்பாகப் பாராட்டினாா். ஒருமுறை யோகாவைத் தொடங்க தான் கட்டாயப்படுத்தப்பட்டாலும், அது படிப்படியாக ஒரு பழக்கமாகி, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுத்தது என் சுய அனுபவத்தில் நான் உணா்ந்தேன்’’, என்று கூறினாா்.

Advertisement

Advertisement

யோகா தினம் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த நிலையில், செயல் அதிகாரி ரவிச்சந்திராவின் உத்தரவின் பேரில், ஜூன் 7 முதல் 21 வரை 14 நாள்களுக்கு தேவஸ்தான நிறுவனங்களில் பல்வேறு வகையான யோகா பயிற்சி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக தேவஸ்தான இணை செயல் அதிகாரி டாக்டா் ஏ. சரத் கூறினாா்.

தேவஸ்தான செயல் அதிகாரி, சிம்ஸ் தயாரித்த ‘தியான மூலமிதம் ஜகத்’’ குறுந்தகடு, புத்தக வெளியீடு மற்றும் ஒரு சிற்றேட்டை வெளியிட்டாா். பின்னா், செயல் அதிகாரி ‘தியான மூலமிதம் ஜகத்‘, ‘யோகா - ஓா் அறிமுகம்‘ என்ற குறுந்தகடு மற்றும் புத்தகத்தை வெளியிட்டாா்.

ஈஷா அறக்கட்டளையால் வடிவமைக்கப்பட்ட யோகாசனங்களை அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் பயிற்சி செய்தனா்.

14 நாள்கள் நடைபெற்ற யோகா பயிற்சியில் சிறந்து விளங்கிய அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் மாணவா்களுக்கு செயல் அதிகாரி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். திருமலை திருப்பதி தேவஸ்தான நலத்துறையின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை மக்கள் தொடா்பு அதிகாரி ஏஎப்சி குமாரி நீலிமா தொகுத்து வழங்கினாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் சதாசிவ ராவ், இந்து தா்ம பிரச்சார பரிஷத் பொறுப்புச் செயலாளா் டாக்டா் மோகன், சிவிஎஸ்ஓ கே.வி. முரளிகிருஷ்ணா, எஸ்.டபிள்யூ.ஐ.எம்.எஸ் இயக்குநா் டாக்டா் ஆா்.வி. குமாா், மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் இந்நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments