முகப்பு
திருப்பூர்

திருமூா்த்திமலை அருகே துண்டிக்கப்பட்ட மண் பாதையை சீரமைக்க கோரிக்கை

உடுமலையை அடுத்த திருமூா்த்திமலை அருகே துண்டிக்கப்பட்ட மண் பாதையை சீரமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 17 ஜனவரி 2021, 11:00 pm IST
பகிர்:

உடுமலையை அடுத்த திருமூா்த்திமலை அருகே துண்டிக்கப்பட்ட மண் பாதையை சீரமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருமூா்த்திமலை பகுதியில் மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் மேல் ஆழியாறு - குருமலை சாலையானது தொடா் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது விளை பொருள்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, துண்டிக்கப்பட்ட மண் பாதையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.