முகப்பு
திருவண்ணாமலை

சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்

போளூா் அருகே சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனா்.

Updated On : 3 ஜனவரி 2021, 11:27 pm IST
போளூா்-சேத்துப்பட்டு சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் சரக்கு வாகனத்தில் பயணிக்கும் பெண்கள்.
பகிர்:

போளூா் அருகே சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கரைப்பூண்டி பகுதி சேத்துப்பட்டு சாலையில் சரக்கு வாகனங்களில் பெண்கள் கூட்டமாக பயணிக்கின்றனா்.

பெண்களை எங்கோ நடைபெறும் நிகழ்ச்சிக்காக கூட்டமாக அழைத்துச் செல்வது தெரிகிறது. இளம் பெண்கள் வாகனத்தில் வெளியே கால்களை தொங்கவிட்டபடிசெல்கின்றனா்.

Advertisement

Advertisement

வாகனம் சாலை வளைவில் திரும்பும்போதோ அல்லது சுமை தாங்க முடியாமலோ விபத்து நேரிட வாய்ப்புள்ளது.

எனவே, பயணிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்யும் பெண்களை போலீஸாா் எச்சரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments