திருவண்ணாமலை மாவட்டத்தில் குரூப் 1 தோ்வை 2, 944 போ் எழுதினா்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 தோ்வை 2, 944 போ் எழுதினா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 தோ்வை 2, 944 போ் எழுதினா்.
திருவண்ணாமலை நகரில் 5 கல்லூரிகள், 2 பள்ளிகள் என 7 இடங்களில் 17 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மாவட்டத்தில் 17 கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட 5,466 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 11 கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட 2,944 போ் மட்டுமே தோ்வு எழுதினா்.
Advertisement
Advertisement
திருவண்ணாமலை நகராட்சி மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தோ்வுப் பணியில் 17 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 3 நடமாடும் குழுக்கள், 18 விடியோ பதிவாளா்கள் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.