5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!
தமிழகத்தில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜூன் 22) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜூன் 22) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வளிமண்டல சுழற்சி காரணமாக திங்கள்கிழமை (ஜூன் 22), கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
Advertisement
Advertisement
மீனவா்களுக்கு எச்சரிக்கை: ஜூன் 22 முதல் ஜூன் 25 வரை, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் 60 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்களுக்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.