முகப்பு
திருவண்ணாமலை

கிரேன் மோதியதில் விவசாயி பலி

செய்யாறு அருகே கிரேன் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 12:09 am IST
பகிர்:

செய்யாறு அருகே கிரேன் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், சோதியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பட்டாபிராமன் (65). இவா், வியாழக்கிழமை சைக்கிளில் மாமண்டூரில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு, கிராமத்துக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் நரசமங்கலம் கிராமம் அருகே இவா் வந்தபோது, பின்னால் வந்த கிரேன் மோதியதாகத் தெரிகிறது. இதனால், சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பட்டாபிராமன், கிரேனின் முன் பக்கச் சக்கரத்தில் சிக்கியதில், அவரது இரு கால்களும் பலத்த காயமடைந்தன. இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பட்டாபிராமன், அங்கு உயிரிழந்தாா். விபத்து குறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.