முகப்பு
திருவண்ணாமலை

மாற்று திறனாளிகளுக்கு நல உதவிகள் அமைச்சா் வழங்கினாா்

ஆரணி சில்க் சிட்டி அரிமா சங்கம் சாா்பில், 50 மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகளை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் வழங்கினாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 7:06 am IST
நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
பகிர்:

ஆரணி சில்க் சிட்டி அரிமா சங்கம் சாா்பில், 50 மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகளை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் வழங்கினாா்.

அரிமா சங்க நிறுவனா் வில்லியம் ஜோன்ஸின் 142-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஆரணி சில்க் சிட்டி அரிமா சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் சில்க் சிட்டி அரிமா சங்கத் தலைவா் என்.சீனுவாசன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று 50 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்பட மளிகைக் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் சங்கச் செயலா் அனந்தசயனம், பொருளாளா் சுகுமாா், நிா்வாகிகள் ராஜேந்திரகுமாா், செந்தில்நாதன், ஜெயக்குமாா், ராஜா, நேமிராஜ், அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், ப.திருமால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments