உ.பி.: மால் லிஃப்ட்டில் சிக்கிக்கொண்ட 13 பேர்; பதற்றத்தில் இளம்பெண் மயக்கம்
உத்தரப் பிரதேசத்தில் மின்வெட்டு காரணமாக மால் லிஃப்ட்டில் 13 பேர் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மின்வெட்டு காரணமாக மால் லிஃப்ட்டில் 13 பேர் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பரேலியில் உள்ள மாலின் லிஃப்ட் மின்வெட்டு காரணமாக நின்றதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் சுமார் 35 நிமிடங்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதில் சிக்கியிருந்தவர்களில் இளம்பெண் ஒருவர் பதற்றத்தின் காரணமாக மயக்கமடைந்தார்.
முதலில் அவர்கள் லிஃப்ட் கதவு திறக்கும் என்று காத்திருந்தனர். ஆனால், உள்ளே நிலவிய வெப்பம் மற்றும் புழுக்கத்தால் தவித்த அவர்கள் பின்னர் கூச்சலிட்டு உதவி கோரினர். லிஃப்ட்டுக்குள் இருந்த அவசரக்கால எண்ணைப் பயன்படுத்தி மால் பாதுகாப்புப் பிரிவைத் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
Advertisement
Advertisement
இருப்பினும், அதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில், பிகாரிபூரைச் சேர்ந்த 17 வயதான ஷாலினி என்ற இளம்பெண் பதற்றத்தால் மயக்கமடைந்தார். இதையடுத்து, லிஃப்ட்டுக்குள் இருந்த சிலர் கதவை உடைக்கத் தொடங்கினர். வெளியே இருந்தவர்களும் மால் ஊழியர்களும் மீட்புப் பணியில் இணைந்தனர்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்திற்குப் பிறகு, லிஃப்ட் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மயக்கமடைந்த அந்தப் பெண் வெளியே கொண்டு வரப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெனரேட்டரை இயக்க முயன்றபோது, லிஃப்ட்டுக்குள் இருந்த ஒருவர் கதவை உதைத்ததாகவும், அதனால் சென்சார்செயல்படாமல் போனதாகவும் மால் நிர்வாகம் போலீஸாரிடம் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர். இச்சம்பவத்தால் மாலில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
Thirteen people, including women and children, were trapped inside a mall lift here for about 35 minutes after it malfunctioned amid a power outage, officials said on Monday. A teenager among the trapped passengers fainted due to panic.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.