முகப்பு
இந்தியா

ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்பு

ஜம்முவில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Updated On : 4 ஜூலை 2026, 8:23 pm IST
பகிர்:

ஜம்முவில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஜம்முவில் உள்ள 'பீர் கோ'கோயில் அருகே தாவி ஆற்றில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் அதன் நடுவே சிக்கிக்கொண்டனர். தகவல் கிடைத்த உடனே ஜம்மு போலீஸ் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை இணைந்து மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

4 சிறுவர்களும் எவ்விதக் காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும், சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

மீட்புப் பணிக்குப் பிறகு, நீர்மட்டம் மாறுபடும் காலங்களில் தாவி ஆற்றின் கரைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது. நீர்மட்டம் திடீரென உயரும் அபாயம் இருப்பதால், குழந்தைகள் ஆற்றின் அருகே செல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில், கனமழையால் அப்பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு காரணமாக, சனிக்கிழமை கௌகா அருகே உள்ள ராம்நகர்-உதம்பூர் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது. இதனால் அப்பாதையில் பயணிக்க முடியாமல் போக்குவரத்து தடைபட்டது.

summary

Four children, who went for bathing in the Tawi River, were rescued after a sudden rise in the river's water level left them stranded near the Peer Kho Temple here on Saturday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments