முகப்பு
தமிழ்நாடு

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் இஸ்ரேலை மோடி கண்டிக்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்

அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் இஸ்ரேலை மத்திய பாஜக அரசு கண்டிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருப்பது தொடர்பாக...

Updated On : 22 ஜூன் 2026, 1:07 pm IST
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்
பகிர்:

அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் இஸ்ரேலை மத்திய பாஜக அரசு கண்டிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் மத்தியஸ்த முயற்சியாலும், உலக சமாதான சக்திகளின் போராட்டத்தின் காரணமாகவும், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் மேற்காசியாவில் அமைதி திரும்பும் சூழலும், ஹார்முஸ் நீரிணை சரக்குக் கப்பல்களின் போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டு, உலக அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, விலையேற்றம் பிரச்னைகளுக்குத் தீர்வு பிறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த அமைதி உடன்பாட்டின் தொடர்ச்சியாக, அதை நடைமுறை படுத்துவது தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில், பாகிஸ்தான், கத்தார் நாடுகளின் மத்தியஸ்துடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

அதை சீர்குலைக்கும் உள்நோக்கத்தோடு, ஈரானின் நட்பு நாடான, லெபனான் மீது இஸ்ரேல் ராணுவத் தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் நோக்குடன் இஸ்ரேல் சூழ்ச்சியுடன் செயல்படுவது, மேற்காசியாவின் அமைதியை பாதிக்கும். லட்சக்கணக்கான இந்தியர்களும், தமிழர்களும் மேற்காசிய நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்று நாடுகடந்து பணியாற்றி வருகிறார்கள். மேற்காசியாவில் போர்ப் பதட்டம் நீடிப்பது இவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

இந்த நிலையில், அமைதி உடன் பாட்டை சீர்குலைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை மத்திய பாஜக மோடி அரசு கண்டிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

summary

Modi must condemn Israel for undermining US-Iran talks: CPI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments