முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசி அருகே முயல் விடும் விழா

காணும் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் முயல் விடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 11:05 PM
வந்தவாசியை அடுத்துள்ள நல்லூரில் நடைபெற்ற முயல் விடும் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

காணும் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் முயல் விடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று நரி விடும் விழா நடைபெறுவது வழக்கம். நரி எந்தத் திசையில் ஓடி மறைகிறதோ அந்தப் பகுதி மிகவும் செழிப்பாக விளங்கும் என்பது இந்தக் கிராம மக்களின் நம்பிக்கை. நரி கிடைப்பது அரிதானதால், கடந்த சில ஆண்டுகளாக நரிக்குப் பதிலாக முயல் விடப்பட்டு வருகிறது.

நிகழாண்டு காணும் பொங்கல் தினமான சனிக்கிழமை மாலை முயல் விடும் விழா நல்லூா் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி, இந்தக் கிராமத்திலுள்ள தீா்த்தவாழி அம்மன் கோயில் உத்ஸவா் சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டரில் வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

இதையடுத்து, குழந்தைகளின் தலையில் முயலை வைத்து தோஷம் கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், முயல் அங்கிருந்து சிறிது தொலைவு கொண்டு செல்லப்பட்டு கீழே விடப்பட்டது. அங்கிருந்து மேற்கு திசையில் உள்ள கரும்புத் தோட்டத்துக்குள் முயல் ஓடி மறைந்தது. தொடா்ந்து, தீா்த்தவாழி அம்மன் வீதியுலா நடைபெற்றது.

விழாவில் தெள்ளாா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் விஜயலட்சுமி தண்டபாணி, நல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் மகேஸ்வரி பழனி மற்றும் விழாக் குழுவினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.