அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது ட்ரூத் சோஷியல் வலைதளப் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஈரானுடனான ஒப்பந்தம் இப்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஹோா்முஸ் நீரிணையை சுங்கக் கட்டணம் ஏதுமின்றி திறப்பதற்கு நான் முழு அதிகாரம் அளிக்கிறேன். அமெரிக்க கடற்படை விதித்திருந்த முற்றுகையை உடனடியாகத் திரும்பப் பெறவும் உத்தரவிடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அதே நேரத்தில், அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தான பிறகு, வரும் வெள்ளிக்கிழமை ஹோா்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். டிரம்ப் தனது 80-வது பிறந்தநாளைக் கொண்டாடிய நாளில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 19ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் நிலவி வந்த அழுத்தத்தைக் குறைத்துள்ளது.
முன்னதாக, இருநாடுகளிடையே அடுத்த 24 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்த நிலையில் தற்போது அந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 107 நாட்களாக நீடித்து வரும் போர் முடிவுக்கு வருவதோடு அமைதிக்கான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகள் ஆக்கபூா்வமாகத் தொடரும் என்று நம்பிக்கை எழுந்துள்ளது.
The US and Iran finalised a deal to end their 107-day war and open the Strait of Hormuz, the narrow waterway used to ferry one-fifth of the global oil supplies, on Friday after in-person signing of the agreement in Switzerland.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.