FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுகிறது: டொனால்ட் டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஜூலை 2026, 10:06 pm IST
ஹோர்முஸ் நீரிணை | டொனால்ட் டிரம்ப் - சித்திரிப்பு
பகிர்:

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.

பின்னர், ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க குற்றம் சாட்டிய நிலையில் 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

Advertisement

Advertisement

தொடர்ந்து, இரு நாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் இடைக்கால அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவித்தது. ”அமெரிக்கா இப்பகுதியில் தனது தலையீட்டை நிறுத்தும் வரை அது மூடப்பட்டே இருக்கும். எந்தவொரு கப்பலும் இந்த நீரிணையைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படாது” என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஈரானின் இந்த அறிவிப்பால் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவன நேர்காணலில் பேசிய டிரம்ப், “வணிகப் பயன்பாட்டிற்காக ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுகிறது” எனத் அறிவித்தார்.

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதாக அறிவித்த மறுநாளே டிரம்ப் அதனைத் திறப்பதாகப் பேசியுள்ளது இரு நாடுகளிடையே போர் பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

summary

US President Trump stated today that the Strait of Hormuz has been opened.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments