மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்(பிஎஸ்என்எல்) நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூலை 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு விளம்பர எண்.: BSNL CO-11/12(11)/1/2026-RECTT-CO)
பணி: Junior Telecom Officer
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 100
சம்பளம்: மாதம் ரூ.16,400 - ரூ.40,500
தகுதி : பொறியியல் துறையில் Electronics, Telecommunication,Computer Science, Information Technology, Electrical, Instrumentation, Radio Technology போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் பிரிவில் எம்எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் முக்கிய பொறியியல் பாடத்திலிருந்தும், பொது அறிவுபிரிவிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.2,000. எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கான கட்டணம் ரூ.1,000 மட்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bsnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
The BSNL – Bharat Sanchar Nigam Limited has officially announced a massive 2026 recruitment Notification to fill 100 Junior Telecom Officer (Telecom) vacancies.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.