FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? எஸ்பிஐ வங்கியில் 1,538 கிளார்க் பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் (எஸ்பிஐ) 1,538 ஜூனியர் அசோசியேட்ஸ் (கிளார்க்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

எஸ்பிஐ வங்கியில் 1,538 கிளார்க் பணி - பாரத ஸ்டேட் வங்கி
பகிர்:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் (எஸ்பிஐ) 1,538 ஜூனியர் அசோசியேட்ஸ் (கிளார்க்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 65 இடங்கள் உள்ளன. இந்த அரிய வாய்ப்பை தகுதியான பட்டதாரி இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CRPD/CR/SPLDRIVE/2026-27/16

Junior Associates (Customer Support & Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆனால் 31.12.2026-க்குள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் வட்டார மொழியை பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

விண்ணப்பிப்போர் 1.4.2026 தேதியின்டி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.4.1998-க்கு முன்னரோ, 1.4.2006-க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் சுமார் ரூ.46,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

மூன்று கட்ட தேர்வு

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வட்டார மொழி தகுதித் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில்/கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விருதுநகர், விழுப்புரம்.

கட்டணம்

பொதுப் பிரிவு, ஓபி.சி மற்றும் இடபுள்யுஎஸ். பிரிவினருக்கு ரூ.750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://sbi.bank.in/web/careers/current openings என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி கடைசி நாள்: 27.8.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

SBI Recruitment 2026 for 1,538 Junior Associates Clerk Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments