FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

என்டிபிசி நிறுவனத்தில் துணை மேலாளர் பணி: ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி!

"என்டிபிசி" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து...

என்டிபிசி நிறுவனத்தில் துணை மேலாளர் பணி - கோப்புப்படம்
பகிர்:

பொதுத்துறை நிறுவனமான "என்டிபிசி" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 26-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 10/26

மொத்த காலியிடங்கள்: 135

Advertisement

Advertisement

பணி: Deputy Manager

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Electrical - 40

2. Mechanical - 55

3. Control & Instrumentation - 40

சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் அல்லது அதற்கு இணையான பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்து ற்று மின் திட்ட இயக்கம், பராமரிப்பு பணியில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 26.8.2026 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் தொடர்பான விபரம் மின்அஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து எதிர்கால பயன்பாட்டிற்காக கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காகன கடைசி நாள்: 26.8.2026

summary

NTPC Recruitment of Deputy Managers in the disciplines of Electrical, Mechanical and C&I

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments