சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை
கடந்த வாரம் தொடர்ந்து 3 நாள்களுக்கு சரிவைக் கண்ட மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், திங்கள்கிழமை சரிவிலிருந்து
கடந்த வாரம் தொடர்ந்து 3 நாள்களுக்கு சரிவைக் கண்ட மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், திங்கள்கிழமை சரிவிலிருந்து மீண்டது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவு போன்ற பொருளாதார நிலவரங்களால் முதலீட்டாளர்கல் கடந்த வாரம் மிகுந்த எச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தொடர்ந்து 3 நாள்களாக பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய மும்பைப் பங்குச் சந்தையில் உள்நாட்டு அமைப்பியல் முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கிக் குவித்ததால் சென்செக்ஸ், 34,636 புள்ளிகள் வரை சென்றது.
எனினும், பின்னர் பங்குகளை விற்பனை செய்வதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியதால் அந்த பங்கு வர்த்தகத்தில் தொய்வு ஏற்பட்டு சென்செக்ஸ் 33,974 புள்ளிகள் வரை கீழிறங்கியது. எனினும், இறுதியில் சென்செக்ஸ் 34,474 புள்ளிகளில் நிலைத்தது.
இதன் மூலம், மும்பை சென்செக்ஸ் வியாழக்கிழமை 97 புள்ளிகள் (0.28%) அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 31புள்ளிகள் (0.31%) அதிகரித்து 10,348 புள்ளிகளாக நிலைத்தது.