1 கோடி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: டெலாய்ட்
பெண்கள் சுயசார்பு அடையும் வகையில் 1 கோடி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்க உள்ளதாக டெலாய்ட் நிறுவனம்
பெண்கள் சுயசார்பு அடையும் வகையில் 1 கோடி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்க உள்ளதாக டெலாய்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சர்வதேச தலைமைச் செயல் அதிகாரி புனித் ரென்ஜன் கூறியுள்ளதாவது:
பெண்களின் நிலையான முன்னேற்றத்துக்கு ஐ.நா. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் வகையில் உலக அளவில் வரும் 2030-க்குள் 5 கோடி பேருக்கு பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க டெலாய்ட் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சிகளை அளிப்பதன் மூலம் பெண்கள் எதிர்காலத்தில் யார் உதவியும் இன்றி அவர்களின் குடும்பங்களை தாங்களாகவே கவனித்துக் கொள்ளும் ஊக்கத்தைப் பெறமுடியும்.
இந்தியாவில் மட்டும் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 1 கோடி பெண்களுக்கு பயிற்சிகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய பொருளாதாரத்தில் பெண்களின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருப்பதற்கு
பள்ளிகளில் மாணவியரின் விகிதத்தை அதிகரிப்பது, உயர் கல்வியில் பெண்களின் பங்களிப்பை உயர்த்துவது, வேலைவாய்ப்பை பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவது உள்ளிட்ட பெண்கள் முன்னேற்றத்துக்கான ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்றார் அவர்.