முகப்பு
வணிகம்

குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!

குஜராத்தின் சனந்தில் ரூ.3,300 கோடி முதலீட்டில், செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததுள்ளது.

Updated On : 2 செப்டம்பர் 2024, 6:59 pm IST
கோப்புப் படம்
பகிர்:

குஜராத்தின் சனந்தில் ரூ.3,300 கோடி முதலீட்டில், செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததுள்ளது.

கெய்ன்ஸ் செமிகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது ரூ.3,300 கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் சிப் (IC) உற்பத்தி செய்யும் திறன் படைத்த தொழிற்சாலை அமைக்கும் என்றார் ஒளிபரப்புத்துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ்.

இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் சிப்கள் தொழில்துறை, வாகன, மின்சார வாகனங்கள், நுகர்வோர் மின்னணுவியல், தொலைத் தொடர்பு மற்றும் மொபைல் போன்கள் ஆகிய பிரிவுகளில் பயன்படுத்தப்படும்.

Advertisement

Advertisement

இந்தியாவில் செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பின் மேம்பாட்டிற்கான திட்டம் டிசம்பர் 2021ல் அறிவிக்கப்பட்டது, மேலும் 2023ல் குஜராத் சனந்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான முதல் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதன்பிறகு பிப்ரவரி 2024ல் மேலும் மூன்று செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் குஜராத்தின் தோலேராவில் செமிகண்டக்டர் தொழிற்சாலையையும், அசாமின் மோரிகானில் மற்றொரு தொழிற்சாலையையும் நிறுவ உள்ளது. குஜராத்தின் சனந்தில் மற்றொரு செமிகண்டக்டர் தொழிற்சாலை நிறுவவும் சிஜி பவர் திட்டமிட்டுள்ளது. இந்த 4 தொழிற்சாலைகளும் ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டைக் ஈர்க்கும் எனவும், இதன் மொத்த திறன் நாள் ஒன்றுக்கு சுமார் ஏழு கோடி சிப்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments