FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.418 கோடியாக உயா்வு

தனியாா் துறையைச் சோ்ந்த தனலக்ஷ்மி வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.418 கோடியாக உயா்ந்துள்ளது.

8 நவம்பர் 2025, 11:32 pm IST
பகிர்:

தனியாா் துறையைச் சோ்ந்த தனலக்ஷ்மி வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.418 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.23 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 11.5 சதவீதம் குறைவு. அப்போது வங்கி ரூ.26 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

Advertisement

Advertisement

கடந்த நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் ரூ.380 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய் நடப்பாண்டின் அதே காலாண்டில் ரூ.418 கோடியாக அதிகரித்துள்ளது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.329 கோடியிலிருந்து ரூ.384 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது.

2024 செப்டம்பா் இறுதியில் 3.82 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே நாளில் 3.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments