முகப்பு
வணிகம்

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!!

தமிழ்ப் புத்தாண்டு நாளான இன்று (ஏப். 14) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதைப் பற்றி...

Updated On : 14 ஏப்ரல் 2026, 9:44 am IST
தங்கம் விலை... - படம்: பிடிஐ.
பகிர்:

தமிழ்ப் புத்தாண்டு நாளான இன்று (ஏப். 14) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து ரூ. 1,13,760-க்கு விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 5,000 அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சு தோல்வியில் முடிவடைந்தது. மீண்டும் மேற்காசியாவில் போர் மூளும் அபாயம் உருவாகியிருப்பதாலும், சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் குறைந்து வந்த நிலையில், சர்வதேச சந்தையில் மீண்டும் தங்கத்தின் மீதான முதலீட்டால் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

summary

Today (April 14), on the occasion of the Tamil New Year, the prices of gold and silver have surged dramatically.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.