தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!
தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,200 அதிரடியாக குறைந்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல சர்வதேச காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் திங்கள்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ. 1,12,480-க்கு விற்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை ரூ. 1,13,760, புதன்கிழமை ரூ. 1,14,560, வியாழக்கிழமை ரூ. 114,880 எனத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
Advertisement
இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சவரனுக்கு . 1,200 அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 14,210 -க்கும் ஒரு சவரன் ரூ. 113,680 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இரண்டாவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 275-க்கும், ஒரு கிலோ ரூ. 2,75,000 ஆகும்.