தங்கம் விலை இன்றும் (மே 14) உயர்வு! எவ்வளவு?
தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 14) காலை சவரனுக்கு ரூ. 400 அதிகரித்துள்ளது.
நாட்டின் பொருளாதார சிக்கல், ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றினால் ஓராண்டுக்கு மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்த நிலையில் தங்கம், வெள்ளி பொருள்கள் மீதான சுங்க வரியை 6ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இதையடுத்து நேற்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8,560-ம், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 30,000-ம் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் மாலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 3,200 குறைந்து, ரூ. 1,20,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 15,050-க்கும், ஒரு சவரன் ரூ. 120,400 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 315-க்கும், ஒரு கிலோ ரூ. 3,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Gold and Silver price today chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.