FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்...

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

தங்கம் விலை - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று(சனிக்கிழமை) ரூ. 240 உயர்ந்துள்ளது.

சர்வதேச போர்ப் பதற்றம், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 800 உயர்ந்தது. நேற்றைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

இன்று(சனிக்கிழமை) சவரனுக்கு ரூ. 240 அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,630-க்கும், ஒரு சவரன் ரூ. 1,17,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 290-க்கும், ஒரு கிலோ ரூ. 2,90,000-க்கும் விற்பனையாகிறது.

summary

Chennai Gold and Silver Price Trends may 30

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments