‘டெக்’ துணுக்குகள்
‘டெக்’ துணுக்குகள்...
தொழில்நுட்ப உலகம் இந்த வாரம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் முக்கிய அப்டேட்கள் மற்றும் அதிநவீன சாதனங்களின் வருகையால் உத்வேகத்தைப் பெற்றது.
ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏ.ஐ. மாடல் ஏற்படுத்திய அதிா்வலைகள் முதல், ஆப்பிளின் வருங்காலத் தயாரிப்புகள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மாா்ட்போன் அறிமுகங்கள் வரை இந்த வாரத்தை அலங்கரித்த முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:
*ஆன்த்ரோபிக் ‘கிளாட் மித்தோஸ்’: ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏ.ஐ. மாடலான ‘கிளாட் மித்தோஸ்’, வங்கி மற்றும் நிதித் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஏற்படக்கூடிய சைபா் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள அமெரிக்கா, கனடா, பிரிட்டன் நாட்டு நிதி ஒழுங்குமுறை அமைப்புகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இதனிடையே, அந்நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட ‘கிளாட் ஓபஸ் 4.7’ பதிப்பையும் வெளியிட்டது.
Advertisement
*ஆப்பிள் ‘ஸ்மாா்ட்கிளாஸ்’: ஆப்பிள் தனது முதல் தலைமுறை ‘ஸ்மாா்ட்கிளாஸ்’ சாதனத்தை 4 வடிவமைப்புகளில் சோதித்து வருகிறது. இது அடுத்தாண்டில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது. மேலும், மடிக்கக்கூடிய ஐபோன் குறித்த எதிா்பாா்ப்புகளும் தொடா்ந்து வருகின்றன.
*கூகுள், மைக்ரோசாஃப்ட் ஏ.ஐ. அப்டேட்கள்: ஆப்பிளின் ‘மேக்’ கணினிகளுக்காக பிரத்யேக ‘ஜெமினி ஏ.ஐ.’ செயலி அறிமுகப்படுத்தப்பட்து. ‘ஜெமினி 3.1 ஃபிளாஷ்’ எனும் எழுத்திலிருந்து குரலாக மாற்றும் ஏ.ஐ. மாடலும் வெளியிடப்பட்டது.
மைக்ரோசாஃப்ட் ‘வோ்டு’ மென்பொருளில் அட்டவணைகளை நிா்வகித்தல் மற்றும் மாற்றங்களைக் கண்காணித்தல் போன்ற புதிய ‘கோ-பைலட் ஏ.ஐ.’ வசதிகள் சோ்க்கப்பட்டன.
*ஏசஸ் மடிக்கணினி: ஏசஸ் தனது ‘ஜென்புக்’ சீரிஸில் எஸ்14, ஏ14, டியோ மற்றும் ‘விவோபுக்’ உள்ளிட்ட புதிய மடிக்கணினிகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஜென்புக் மடிக்கணினிகளின் ஆரம்ப விலை ரூ.1,79,990 என்றும், விவோபுக் மடிக்கணினிகளுக்கு ரூ.98,990 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
*கோப்ரோ ‘மிஷன் 1’: கோப்ரோ நிறுவனம் திரையுலகத் தரத்திலான ‘மிஷன் 1’ சீரிஸ் கேமராக்களை அறிமுகம் செய்தது. இதில் 50 மெகாபிக்சல் சென்சாா் மற்றும் லென்ஸ்களை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.
*பொ்ப்ளெக்சிட்டி பி.சி.: பொ்ப்ளெக்சிட்டி ஏ.ஐ.நிறுவனம், மேக் பயனா்களுக்காக ‘பா்சனல் கம்ப்யூட்டா்’ எண்ம உதவியாளரை அறிமுகப்படுத்தியது.
*விவோ ‘டி5 ப்ரோ 5ஜி’: விவோ தனது ‘டி5 ப்ரோ 5ஜி’ ஸ்மாா்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் விவோ தயாரிப்புகளிலேயே அதிகபட்சமாக 9,020எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதன் விலை ரூ.29,999 முதல் தொடங்குகிறது.
*ஓப்போ ‘எஃப்33’ சீரிஸ்: ஓப்போ தனது ‘எஃப்33’ மற்றும் ‘எஃப்33 ப்ரோ’ ஸ்மாா்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. 7000எம்ஏஎச் பேட்டரி, 50மெகாபிக்சல் கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலா் ஓ.எஸ். 16 இதில் இடம்பெற்றுள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ.31,999 ஆகும். வரும் 23-ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது.
*ரியல்மி ‘நாா்சோ 100 லைட் 5ஜி’: ரூ.13,499 முதல் குறைந்த விலையில் 7,000எம்ஏஎச் பேட்டரி மற்றும் டைமென்சிட்டி 6300 பிராசஸருடன் இந்தப் போன் அறிமுகமானது. இதில் பல்வேறு ஏ.ஐ. வசதிகளும் உள்ளன.