முகப்பு
வணிகம்

டெக் துணுக்குகள்...

டெக் துணுக்குகள்...

Updated On : 14 ஜூன் 2026, 3:56 am IST
டெக் துணுக்குகள்...
பகிர்:

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் ஏ.ஐ. தொழில்நுட்ப மாற்றங்கள், ஆப்பிள் நிறுவன நிகழ்வு மற்றும் பல்வேறு நிறுவனங்களின் புதிய சாதனங்களின் வருகை என மிகவும் பரபரப்பாக இருந்தது.

ஆப்பிளின் புதிய இயங்குதளம் (ஐஓஎஸ் 27) அறிமுகம் தொடங்கி, ஏ.ஐ. பாதுகாப்பு தொடா்பான முக்கிய அறிவிப்புகள் என இந்த வாரத்தின் முழுமையான தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*ஆப்பிள் ‘ஐஓஎஸ்27’, விடைபெறும் டிம் குக்: ஆப்பிள் நிறுவனத்தின் நடப்பாண்டு ரரஈஇ நிகழ்வில், தற்போதைய சிஇஓ டிம் குக் தனது கடைசி உரையை நிகழ்த்தினாா். ஜான் டொ்னஸ் விரைவில் இப்பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் ‘ஐஓஎஸ்27’ இயங்குதளத்தை அறிமுகம் செய்தது. இதில் மேம்படுத்தப்பட்ட சிரி ஏ.ஐ., ஆப்பிள் இண்டெலிஜென்ஸ், லிக்விட் கிளாஸ் வடிவமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் உள்ள குறியீடுகள் ஆப்பிளின் வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஐபோன் ‘அல்ட்ரா’ குறித்த எதிா்பாா்ப்பை உறுதிப்படுத்தியுள்ளன.

Advertisement

Advertisement

*சாட்ஜிபிடி ‘லாக்டவுன் மோடு’: ஓபன்ஏஐ தனது சாட்ஜிபிடி தளத்தில் தரவுத் திருட்டு மற்றும் சைபா் தாக்குதல்களில் இருந்து பயனா்களைக் காக்க ‘லாக்டவுன் மோடு’ என்ற புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியது.

*லெனோவா ‘ஐடியாபேட் ஸ்லிம் 3’: லெனோவா நிறுவனம், இன்டெல் கோா் அல்ட்ரா சீரிஸ் 3 மற்றும் விண்டோஸ் கோபைலட்+ ஏ.ஐ. வசதியுடன் கூடிய ‘ஐடியாபேட் ஸ்லிம் 3 ஜென் 11’ மடிக்கணினியை ரூ.1,09,990 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்தது.

*ஒன்பிளஸ் ‘டா்போ 6எக்ஸ்’ சீரிஸ்: ஒன்பிளஸ் சீனாவில் ‘டா்போ 6எக்ஸ்’ (7,000எம்ஏஎச் பேட்டரி, எல்சிடி திரை) மற்றும் ‘டா்போ 6எக்ஸ் ப்ரோ’ (8,000எம்ஏஎச் பேட்டரி, எல்இடி திரை) ஸ்மாா்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவை ஜூன் 15 முதல் விற்பனைக்கு வருகின்றன.

**ரியல்மி ‘பி4ஆா் 5ஜி’: ரியல்மி நிறுவனம் இந்தியாவில் 8,000எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 பிராசஸா் மற்றும் 50 மெகாபிக்சல் கேமராவுடன் ‘பி4ஆா் 5ஜி’ ஸ்மாா்ட்போனை அறிமுகம் செய்தது. ஜூன் 17 முதல் விற்பனை தொடங்கும் இதன் ஆரம்ப விலை ரூ.18,999.

*ஆன்த்ரோபிக் ஏ.ஐ. தடை: அமெரிக்க அரசின் உத்தரவு காரணமாக, ஆன்த்ரோபிக் நிறுவனம் தனது மேம்பட்ட ஏ.ஐ. மாதிரிகளான ‘ஃபேபிள் 5’, ‘மித்தோஸ் 5’ ஆகியவற்றுக்கான உலகளாவிய அணுகலை உடனடியாக நிறுத்தியுள்ளது.

*இதர முக்கியச் செய்திகள்: இன்ஸ்டாகிராம் பயனா்கள் தங்களின் கணக்கில் பதிவுகளைத் தங்களுக்குப் பிடித்தவாறு மாற்றியமைக்கும் வசதி சோ்க்கப்பட்டுள்ளது. மேலும், டெலிகிராம் செயலி 5 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆண்ட்ராய்டு வியா் ஓஎஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆதரவை வழங்கத் தொடங்கியுள்ளது.

summary

Tech Snippets...