FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

8,000 mAh பேட்டரியுடன் வெளியாகும் ரியல்மி நார்ஸோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

ரியல்மி நார்ஸோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி...

Updated On : 14 ஜூலை 2026, 4:41 pm IST
ரியல்மி நார்ஸோ 100எக்ஸ் 5ஜி
பகிர்:

ரியல்மி ஸ்மார்ட்போன்கள் எப்போதும் பேட்டரி திறனில் அசத்தும் மாடல்களை வெளியிடும். அதேபோல, இந்த முறையும் 8,000 mAh பேட்டரி திறனுடன் குறைந்த விலையில் ரியல்மி நார்ஸோஒ 100எக்ஸ் 5ஜி மாடலை வெளியிடுகிறது.

மொபைல் கேமர்களை குறிவைத்து வெளியாகவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், தொடர்ந்து 12 மணி நேரம் வரை எவ்வித பேட்டரி ஹீட் பிரச்னையும் இல்லாமல் கேம் விளையாடும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

Advertisement

Advertisement

செயல்திறன் & சேமிப்புத்திறன்: மீடியாடெக் டைமென்சிட்டி 6300 5ஜி சிப்செட் (6nm கட்டமைப்பு) இயங்குதளத்துடன், 256 ஜிபி சேமிப்புத் திறன் மற்றும் 6 ஜிபி ரேம் வசதியுடன் வெளியாகின்றது.

மென்பொருள்: ஆண்ட்ராய்ட் 16 -ன் கீழ் இயங்கும் ரியல்மி UI 7.0 ஓஎஸ் உடன் இயங்கும் விதமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

திரை: 144 Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.81-அங்குல பஞ்ச்-ஹோல் செல்ஃபி கேமராவுடன் கூடிய PS LCD பேனல் திரையைக் கொண்டுள்ளது.

வடிவமைப்பு: MIL-STD-810H ராணுவத் தரச் சான்றிதழுடன், 1.8 மீட்டர் உயரம் வரை கீழே விழுந்தாலும் உடையாத வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும், IP65 தூசி மற்றும் நீர் உள்ளே செல்லாத வகையிலான திரையுடன், ஈரமான கைகளில் கூட பயன்படுத்த எளிய வகையிலான திரையைக் கொண்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் அமைக்கப்பட்டுள்ளது.

கேமரா: 50 மெகாபிக்ஸல் கொண்ட வைட் ஆங்கிள் பின்பக்க கேமரா மற்றும் 8 மெகாபிக்ஸல் கொண்ட வைட் ஆங்கிள் முன்பக்க கேமரா இதில் அமைக்கப்பட்டுள்ளன.

1080பி தெளிவுத் திறன் கொண்ட விடியோக்களை பதிவு செய்யலாம்.

பேட்டரி: 45W அதிவேக சார்ஜிங் வசதியுடன் 8,000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி இதில் அமைந்துள்ளது.

இதில் சிறப்பம்சமாக ரிவர்ஸ் சார்ஜிங் முறை உள்ளது. இதனால், ஸ்மார்ட்போன் பவர் பேங்க் போன்று வேலை செய்யும். 8,000mAh பேட்டரி திறனை மற்ற கேட்ஜெட்ஸ்களுக்கு சார்ஜ் ஏற்றுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீண்ட காலம் உழைக்கும் வகையில் பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரியல்மீ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 4 ஆண்டுகள் பயன்பாட்டிற்குப் பின்னரும் 80% க்கும் அதிகமான பேட்டரி திறனை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விலை: ரியல்மி நார்ஸோஒ 100எக்ஸ் 5ஜி மாடல் ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை விற்பனை விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளை (ஜூலை 14) வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளாக் (கருப்பு) மற்றும் ஃப்ளாஸ் ஆரஞ்ச் (காவி) போன்ற நிறங்களில் கிடைக்கும்.

அமேஸான் மற்றும் ரியல்மி தளத்தில் இந்த ஸ்மார்ட்போனைப் பெறலாம்.

summary

Realme Narzo 100X 5G smartphone to launch with an 8,000 mAh battery!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments