FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரியல்மி 16 ப்ரோ ஹாரி பாட்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்! சிறப்புகள் என்னென்ன?

ரியல்மி நிறுவனத்தில் 16 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஹாரி பாட்டர் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

24 செப்டம்பர் 2026, 5:22 pm IST
ரியல்மி 16 ப்ரோ - படம் / நன்றி - ரியல்மி
பகிர்:

ரியல்மி நிறுவனத்தில் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹாரி பாட்டர் பதிப்பில் (எடிஷன்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், பயனர்களிடமும் ஹாரி பாட்டர் ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

வார்னஸ் புரோஸ் நிறுவனத்தின் சார்பில் உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதை தொலைக்காட்சித் தொடராக விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதையொட்டி ரியல்மி 16 ப்ரோ இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

Advertisement

Advertisement

  • ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஹாரி பாட்டர் பதிப்பு ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது மந்திரவாதிகளின் சதுரங்கத்தால் ஈர்க்கப்பட்ட ஆர்கைல் வடிவத்துடன் கூடிய, பழுப்பு நிற பின்புற பேனலைக் கொண்டுள்ளது.

  • லைட்-சென்சிங் கலர் சேஞ்சிங் டெக்னாலஜி தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

  • புற ஊதா (UV) ஒளியின் கீழ், போனின் பின்புறத்தில் உள்ள ஹாக்வார்ட்ஸ் சின்னம், உருமாற்றத்திற்கு உள்ளாகி, நான்கு வண்ணங்களும் ஒரே நேரத்தில் தெரியும்.

  • 6.78 அங்குல அமோலிட் திரை கொண்டுள்ளது.

  • திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • மீடியாடெக் டைமென்சிட்டி 7300 மேக்ஸ் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

  • மாலி-G 615 MC2 கிராபிக்ஸ் கார்டு இடம்பெற்றுள்ளது.

  • 12GB உள்நினைவகம், 256GB நினைவகம் கொண்டுள்ளது.

  • கேமரா பிரியர்களைக் கவரும் வகையில் பின்புறம் 200MP முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • ரியல்மி 16 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல அட்டைப்பெட்டியில் வைத்துக்கொப்பதற்கு பதிலாக, ஹாரி பாட்டரில் பயன்படுத்தப்படும் ஹாக்வார்ட்ஸ் பெட்டிக்குள் வைத்து ஸ்மார்ட்போன் வழங்கப்படும்.

  • மாயாஜால பள்ளியின் சேர்க்கைக் கடிதம், பிளாட்பார்ம் 9¾ ரயில் டிக்கெட், கதாபாத்திர அஞ்சல் அட்டைகள், ஒரு பிரத்யேக ஃபோன் கேஸ், புக்மார்க்குகள் மற்றும் ஒரு சிம் எஜெக்டர் கருவி ஆகியவை பெட்டிக்குள் வைத்து வழங்கப்படும்.

summary

Realme 16 Pro smart phone Harry Potter Edition Makes positive response

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments