சோனி கேமராவுடன் வெளியாகும் எச்.எம்.டி. வைப் 2 ப்ரோ ஸ்மார்ட்போன்!
எச்.எம்.டி. வைப் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (செப். 29) அறிமுகமானது குறித்து...
எச்.எம்.டி. வைப் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (செப். 29) அறிமுகமானது. எனினும் அக். 8 ஆம் தேதி முதலே விற்பனைக்கு கொண்டுவரப்படும்.
இதில் அதீத பேட்டரி திறனுக்காக 6000mAh பேட்டரி திறனும், நுணுக்கமான கேமரா அனுபவத்துக்காக சோனி கேமரா சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இரு வகையான நினைவகங்களில் எச்.எம்.டி. வைப் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
Advertisement
Advertisement
6GB ரேம் + 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 15,999
8GB ரேம் + 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 17,999.
சிறப்பம்சங்கள்
எச்.எம்.டி. வைப் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.78 அங்குல எச்.டி. திரை உடையது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர் உடையது.
ஆன்டிராய்டு 16 இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா பிரியர்களுக்காக 64MP முதன்மை கேமரா கொண்டுள்ளது. சிறந்த கேமரா அனுபவத்துக்காக சோனி IMX682 கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி பிரியர்களுக்காக முன்புறத்தில் 12MP கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. இதனால், சிறந்த ஒலி அனுபவம் கிடைக்கும்.
6000mah பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 33W திறன் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளை, பால்பச்சை, நீலம் என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன.
HMD Vibe2 Pro 5G Launched in india with 6000mAh/ 33W
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.