FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஷாவ்மியில் ஐபோனுக்கு நிகரான ஸ்மார்ட்போன்! நவ. 26-ல் வெளியாகும் ஷாவ்மி 18 ப்ரோ, 18 ப்ரோ மேக்ஸ்!

ஷாவ்மியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட18 ப்ரோ, 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் நவ. 26-ல் வெளியாகவுள்ளது குறித்து...

ஷாவ்மி 18 ப்ரோ - படம் / நன்றி - ஷாவ்மி
பகிர்:

ஷாவ்மி நிறுவனத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளன.

சீனாவில் செப்டம்பர் 23 ஆம் தேதி இரு ஸ்மார்ட்போன்களும் வெளியான நிலையில், உலகம் முழுவதும் நவ. 26-ல் வெளியாகிறது.

12GB (RAM) உள்நினைவகம் மற்றும் 256GB நினைவகம் உடைய ஷாவ்மி 18 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 1.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

12GB (RAM) உள்நினைவகம் மற்றும் 512GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 1.69 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஷாவ்மி 18 ப்ரோ மேக்ஸ் 12GB உள்நினைவகம் மற்றும் 512GB உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 1.89 லட்சம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு நிகராக விலை உடைய ஷாவ்மி 18 ப்ரோ சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.

ஷாவ்மி 18 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஷாவ்மி 18 ப்ரோ 6.4 அங்குல அமோலிட் திரை உடையது.

திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.

திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 4,000 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹைப்பர் ஓஎஸ் 4 ஆன்டிராய்டு உடையது.

1TB வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

கேமரா பிரியர்களைக் கவரும் வகையில் மூன்று கேமராக்கள் உள்ளன. 200 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 200 மெகா பிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, 50 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

7,000mAh பேட்டரி திறன் உடையது.

வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 100W வயர் மூலமும் 50W வயர் இல்லாமலும் சார்ஜ் செய்யலாம்.

summary

Xiaomi 18 Pro and 18 Pro Max smart phone global launch in November 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments