FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

12 மணி நேரம் கேம் விளையாடலாம்! அறிமுகமானது ஓப்போ கே14 பிளஸ்!

ஓப்போ நிறுவனத்தின் கே 14 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது குறித்து...

ஓப்போ கே14 பிளஸ் - படம் / நன்றி - ஓப்போ
பகிர்:

ஓப்போ நிறுவனத்தின் கே 14 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அடுத்தடுத்து கே வரிசையில் ஸ்மார்ட்போன்களை ஓப்போ நிறுவனம் அறிமுகம் செய்துவரும் நிலையில், தற்போது ஓப்போ கே 14 வெளியாகியுள்ளது.

ஆன்டிராய்டு செயல்பாடு, பேட்டரி திறன் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 29,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளம் மற்றும் ஓப்போ கிளைகளில் இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் வாங்கலாம்.

Advertisement

Advertisement

6GB + 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 29,999

8GB + 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 32,999

8GB + 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 35,999

சிறப்பம்சங்கள்

ஓப்போ கே 14 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.7 அங்குல அமோலிட் திரை கொண்டது.

திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன் உடையது.

திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 3,600 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 7360 மேக்ஸ் புராசஸர் உடையது.

ஆண்டிராய்டு 17 இயங்குதளம் (ஓஎஸ்) கொண்டது.

கேமரா பிரியர்களுக்காக பின்புறம் 50MP முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 16MP கேமரா வழங்கப்பட்டுள்ளது.

8,000mAh பேட்டரி திறன் கொண்டது. 12 மணி நேரம் தொடர்ந்து கேம் விளையாடலாம், 20 மணிநேரம் தொடர்ந்து யூடியூப் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments