FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விவோ வி80, விவோ வி70, விவோ வி10 எலைட்! விலை எவ்வளவு? எது சிறந்தது?

விவோ நிறுவனத்தில் புதிதாக வி வரிசையில் அறிமுகமான ஸ்மார்ட்போன்களில் எது சிறந்தது என்பது குறித்து...

46 வினாடிகள் முன்பு
விவோ வி80, விவோ வி70, விவோ வி10 எலைட் - படம் / நன்றி - விவோ
பகிர்:

விவோ நிறுவனத்தில் புதிதாக வி வரிசையில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் ஆரம்ப விலை ரூ. 62,999. அதிகபட்சமாக ரூ.70,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், எவை சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறித்து காணலாம்.

விவோ ஸ்மார்ட்போன்கள் 6.59 அங்குல அமோலிட் திரை கொண்டவை.

2750×1260p திரை ரெசல்யூஷன் உடையவை.

Advertisement

Advertisement

திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 5,000nits திறன் கொண்டவை.

விவோ வி80 ஸ்மார்ட்போனில் திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ வி70 ஸ்மார்ட்போனில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது, கண்ணாடி ஃபைபரால் செய்யப்பட்ட பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ வி80, விவோ வி70 ஸ்மார்ட்போன்களில் ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் 7, 4 ஆம் தலைமுறை சிப்செட் கொண்டது.

விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் 8எஸ், 3 ஆம் தலைமுறை சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ வி80 ஆரிஜின் ஓஎஸ் 7 ஆன்டிராய்டு 17 இயங்குதளம் கொண்டது.

விவோ வி70 வரிசையானது ஆரிஜின் ஓஎஸ் 6 ஆன்டிராய்டு 16 இயங்குதளம் கொண்டவை.

விவோ வி80 - 7,200mAh பேட்டரி திறன் கொண்டது.

விவோ வி70, வி70 எலைட் - 6,500mAh பேட்டரி திறன் கொண்டவை.

அனைத்து ஸ்மார்ட்போன்களும் 90W வையர் சார்ஜிங் திறன் கொண்டவை.

விவோ வி80 50MP + 8MP அல்ட்ராவைட் + 50MP ஓஐஎஸ் கேமரா கொண்டது

விவோ வி70, வி70 எலைட் 50MP + 8MP அல்ட்ராவைட் + 50MP டெலிபோட்டோ கேமரா கொண்டது.

அனைத்து போன்களும் 50MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ வி80 விலை ரூ. 62,999.

விவோ வி70 விலை ரூ. 59,999.

விவோ வி70 எலைட் விலை ரூ. 66,999

அனைத்தும் 8GB + 256GB நினைவகம் கொண்டவை.

summary

Vivo V80 vs Vivo V70 Elite vs Vivo V70 smart phone Price in India battery more compared

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.