
உடல்நலனைக் கண்காணிக்கும் ஸ்மார்ட்ரிங் அறிமுகம்! விலை எவ்வளவு?
போட் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்ரிங் இளம் தலைமுறையினரை வெகுவாகக் கவர்ந்துள்ளது குறித்து...

ஸ்மார்ட்ரிங் - படம் / நன்றி - போட்
போட் நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்ரிங் (மின்சார மோதிரம்) இளம் தலைமுறையினரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இளைஞர்களின் அதீத பயன்பாட்டால் பலரிடைய பரவலாகிப்போன ஸ்மார்ட் வாட்ச்-க்கு அடுத்தபடியாக தற்போது இளம் தலைமுறையினரிடையே ஸ்மார்ட்ரிங் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் போட் நிறுவனத்தில் ஆக்டிவ் பிளஸ் என்ற ஸ்மார்ட்ரிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 9,999. எனினும் அமேசான் இணைய விற்பனை தளத்தில் ரூ. 2,220க்கு கிடைக்கிறது.
சிறப்பம்சங்கள்
இதய செயல்பாடுகள், மூச்சுத் திறன், ரத்த ஆக்சிஜன் அளவு, தூக்கம் உள்ளிட்ட உடல்நலன் சார்ந்த தினசரி செயல்பாடுகளை துல்லியமாக கணக்கிடும் வகையில் நுண்ணிய சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
உடலின் வெப்பநிலையை அறிந்து, காய்ச்சல் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே அறிவிக்கும். உடற்பயிற்சிக்குப் பிந்தைய வெப்பநிலை, இயல்பு வெப்பநிலை போன்றவற்றை கணக்கிட்டு வைத்துக்கொண்டு காட்டும்.
துரு, கீறல்கள் ஏற்படாத வகையில் ஸ்டெயின்டெல்ஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
காந்த சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளதால், வயர்கள் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்.
30 நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும்.
தூசி, வியர்வையில் பாதிக்கப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
போட் கிரெஸ்ட் செயலியில் தரவுகளை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
Summary
boAt SmartRing Active Plus Portable Charging Case
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







