இந்தியாவில் 7050mAh, மலேசியாவில் 10000mAh பேட்டரி திறன்! வெளியானது விவோ வி80 லைட்!
விவோ வி80 ஸ்மார்ட்போன் இந்தியாவில் குறைந்த பேட்டரி திறனுடனும் மலேசியாவில் அதிக பேட்டரி திறனுடனும் வெளியாகவுள்ளது குறித்து...
விவோ நிறுவனத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவோ வி80 ஸ்மார்ட்போன் பாகிஸ்தானில் இன்று (ஆக. 26) வெளியானது. இதனைத் தொடர்ந்து செப். 3 ஆம் தேதி மலேசியாவில் அறிமுகமாகவுள்ளது.
பாகிஸ்தானில் 7050mAh பேட்டரி திறனுடன் அறிமுகமான நிலையில், மலேசியாவில் 10000mAh திறனுடன் விவோ வி 80 லைட் ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. இந்தியாவில் வெளியாகும் தேதி குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனிடையே இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதனிடையே பாகிஸ்தானில் இன்று வெளியான விவோ வி80 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.
Advertisement
Advertisement
சிறப்பம்சங்கள்
விவோ வி80 லைட் ஸ்மார்ட்போன் 6.83 அங்குல அமோலிட் திரை உடையது.
திரை சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 3,000 nits திறன் வழங்கப்பட்டுள்ளது.
ஆரிஜின் ஓஎஸ் 6 ஆன்டிராய்டு 16 இயங்குதளம் உடையது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7360 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
கேமரா பிரியர்காளுக்காக 50MP சோனி கேமராவும் 2MP போக் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக 32MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
7,050mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 44W சார்ஜிங் திறன் கொண்டுள்ளது.
நீர் மற்றும் தூசி புகாத்தன்மைக்காக IP68 மற்றும் IP69 திறன் உடையது.
மலேசியாவில் அறிமுகமாகும் விவோ வி80 ஸ்மார்ட்போன் இதே சிறப்பம்சங்களுடன் 10,000mAh பேட்டரி கொண்டதாக வெளியாகவுள்ளது.
Vivo V80 Lite 5G launches with 7,050mAh battery other markets could get 10,000mAh
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.