அடுத்த மாதம் வெளியாகிறது ஐக்யூ 16 ஸ்மார்ட்போன்! சிறப்புகள் என்னென்ன?
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது குறித்து...

ஐக்யூ நிறுவனத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐக்யூ 16 ஸ்மார்ட்போன், நாட்டில் அடுத்த மாதம் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக தயாரிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஐக்யூ நிறுவனம் முடிவு செய்துள்ளதால், தாமதமாக அடுத்த ஆண்டு வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அடுத்த மாத முதல் வாரத்தில் வெளியாகும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானபோது ரூ. 64,999க்கு விற்பனை செய்யப்பட்டது. சீனாவில் ஐக்யூ 16 அறிமுகமாகியுள்ள நிலையில், அங்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 86,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் டிசம்பரில் ஐக்யூ 16 வெளியாகும்போது அதன் விலை ரூ. 1 முதல் 1.2 லட்சம் இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் 6.85 அங்குல அமோலிட் திரை கொண்டது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 165Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 10,000 nits திறன் உடையது.
குவால்கம் ஸ்நாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் 6 ஆம் தலைமுறை புராசஸர் கொண்டது.
12GB அல்லது 16GB உள்நினைவகம், 256GB மற்றும் 512GB நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா பிரியர்களுக்காக 50MP சோனி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 3 மடங்கு அதிகம் ஜூம் செய்துகொள்ளலாம். செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 32MP கேமரா கொடுக்கப்படடுள்ளது.
நீடித்த பேட்டரி திறனுக்காக 8,400mAh பேட்டரி உள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 100W திறன் கொடுக்கப்பட்டுள்ளது. வையர்லெஸ் சார்ஜிங் மூலம் 40W திறன் வேகத்தில் சார்ஜ் செய்யலாம்.
தூசி மற்றும் நீர்ப்புகாத் தன்மைக்காக IP68 / IP69 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.