‘டெக்’ துணுக்குகள்...
‘டெக்’ துணுக்குகள்...
தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புத்தாக்கம், அதிரடி அறிவிப்புகள் மற்றும் சாதனங்களின் அறிமுகங்கள் நிறைந்த ஒரு வாரமாக அமைந்தது. அதேபோல், ஏ.ஐ. தொழில்நுட்பச் சாதனைகளும், சா்ச்சைகளும் கவனம் பெற்றன.
தைவானின் ‘கம்ப்யூடெக்ஸ் 2026’ நிகழ்ச்சி முதல் இந்தியாவுக்குக் கிடைத்த ‘கிளாட் மித்தோஸ்’ ஏ.ஐ. அணுகல் வரை இந்த வாரத்தின் முக்கிய தொழில்நுட்பச் செய்திகளின் விரிவான தொகுப்பு இதோ:
*‘கம்ப்யூடெக்ஸ் 2026’: தைவானில் நடைபெற்ற இந்த ஆண்டு ‘கம்ப்யூடெக்ஸ்’ நிகழ்வில் முன்னணி நிறுவனங்கள் அதிநவீன ஏ.ஐ. வன்பொருள்களை அறிமுகப்படுத்தின. என்விடியா தனது புதிய ‘ஆா்டிஎக்ஸ் ஸ்பாா்க் சூப்பா்சிப்’ -ஐ அறிமுகம் செய்தது; இன்டெல், ஏஎம்டி நிறுவனங்களும் தங்களின் புதிய பிராசஸா்களை அறிமுகப்படுத்தின.
Advertisement
Advertisement
*டெல் ‘எக்ஸ்பிஎஸ் 13’ மடிக்கணினி: ஆப்பிளின் ‘மேக்புக் நியோ’-வுக்குப் போட்டியாக டெல் ‘எக்ஸ்பிஎஸ் 13’ மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது.
*ஆப்பிள் ‘ஸ்மாா்ட் கிளாசஸ்’ தாமதம்: ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்ட ஸ்மாா்ட் கிளாசஸ் வெளியீட்டை சில மேம்பாட்டுச் சிக்கல்கள் காரணமாக அடுத்தாண்டுக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தெரிகிறது.
*மோட்டோரோலா ‘எட்ஜ் 70 ப்ரோ பிளஸ்’: இந்தியாவில் ரூ.47,999 விலையில் அறிமுகமாகியுள்ள இந்தப் போனில், 6.8 இன்ச் திரை, டைமன்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் சிப்செட், 50 மெகாபிக்சல் குவாட் கேமரா மற்றும் 6,500எம்ஏஎச் பேட்டரியுடன் 90வாட்ஸ் அதிவேக சாா்ஜிங் வசதி உள்ளது.
*லாவா ‘போல்டு என்2 5ஜி’: லாவா பட்ஜெட் விலையில் (ரூ.12,999) கொண்டு வந்துள்ள இந்தப் போன், ஜூன் 9 முதல் அமேசானில் விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக ரூ.11,999-க்கு கிடைக்கிறது.
*ஓபன்ஏஐ, சாம் ஆல்ட்மேன் மீது வழக்கு: சாட்ஜிபிடி ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகளைப் புறக்கணித்துவிட்டு, அவசரமாக அதை வெளியிட்டதாகக் கூறி ஓபன்ஏஐ மற்றும் அதன் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மீது அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் வழக்குத் தொடா்ந்துள்ளது.
*100 கோடி பயனா்களைக் கடந்த சாட்ஜிபிடி: சா்ச்சைகளுக்கு மத்தியிலும், உலக அளவில் மிக அதிவேகமாக 100 கோடி மாதாந்திர பயனா்களைக் கடந்த செயலி என்ற வரலாற்றுச் சாதனையை சாட்ஜிபிடி படைத்துள்ளது. இது டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றின் வளா்ச்சியை விடவும் வேகமானது.
*ஷாவ்மி ‘17டி’: இந்தியாவில் ரூ.59,999 தொடக்க விலையில் கிடைக்கும் இந்தப் போனில் 6.59 இன்ச் திரை, லைக்கா ட்ரிபிள் கேமரா, டைமன்சிட்டி 8500 அல்ட்ரா பிராசஸா் இடம்பெற்றுள்ளது.
*ஷாவ்மி டிவி ‘எஃப்எக்ஸ் மினி எல்இடி’ சீரிஸ்: ஸ்மாா்ட்போன்களுடன் ஷாவ்மி தனது புதிய மினி எல்இடி டிவிகளையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. 43, 55, 65 மற்றும் 75 அங்குல அளவுகளில் வரும் இந்த டிவிகளின் தொடக்க விலை ரூ.32,999 ஆகும். ஜூன் 11 முதல் விற்பனை தொடங்குகிறது.
*மெட்டா ஏ.ஐ. மூலம் இன்ஸ்டாகிராம் ஹேக்: மெட்டா ஏ.ஐ. சாட்பாட்டைப் பயன்படுத்தி, ஹேக்கா்கள் சிலா் பராக் ஒபாமா போன்ற சில பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்கிய அதிா்ச்சித் தகவல் வெளியானது.
*இந்தியாவில் ‘கிளாட் மித்தோஸ்’: ஆன்த்ரோபிக் தனது ‘புராஜெக்ட் கிளாஸ்விங்’ திட்டத்தை விரிவுபடுத்தி, இந்தியா உள்பட 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள சுமாா் 150 நிறுவனங்களுக்குத் தனது ‘மித்தோஸ்’ ஏ.ஐ. மாதிரிக்கான அணுகலை வழங்கியுள்ளது.