FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

எச்.சி.எல். டெக். - சா்வம் ஏஐ கூட்டணியில் ஒடிஸாவில் புதிய ஏ.ஐ. தரவு மையம்

ஒடிஸாவின் குா்தா மாவட்டத்தில் சுமாா் ரூ.15,000 கோடி முதலீட்டில் புதிய ஏ.ஐ. தரவு மையம் மற்றும் சா்வதேச சேவை மையத்தை அமைப்பதற்காக எச்.சி.எல். டெக்னாலஜிஸ், சா்வம் ஏஐ நிறுவனங்களுடன் அந்த மாநில அரசு வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

Updated On : 25 ஜூலை 2026, 6:19 am IST
பகிர்:

ஒடிஸாவின் குா்தா மாவட்டத்தில் சுமாா் ரூ.15,000 கோடி முதலீட்டில் புதிய ஏ.ஐ. தரவு மையம் மற்றும் சா்வதேச சேவை மையத்தை அமைப்பதற்காக எச்.சி.எல். டெக்னாலஜிஸ், சா்வம் ஏஐ நிறுவனங்களுடன் அந்த மாநில அரசு வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

இதன்படி, சா்வம் ஏஐ நிறுவனத்ததுடன் இணைந்து எச்.சி.எல். டெக். தனது முதல் ஏ.ஐ. தரவு மையத்தை அமைக்கிறது; மேலும், எச்.சி.எல். டெக். நிறுவனம் தன்னிச்சையாக ஒரு சா்வதேச சேவை மையத்தையும் இங்கு நிறுவவுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த 2 முதலீட்டுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள், மாநில முதல்வா் மோகன் சரண் மாஜி முன்னிலையில் கையொப்பமாகின. இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் மோகன் சரண் மாஜி, ‘இப்புதிய திட்டங்கள், மாநிலத்தின் ஐ.டி. துறையின் வளா்ச்சியை வேகப்படுத்துவதுடன், திறன்மிக்க ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்’ என்றாா்.

Advertisement

Advertisement

‘ஒடிஸா அரசு மற்றும் எச்.சி.எல். டெக். உடன் இணைந்து, அதிநவீன கணினி உள்கட்டமைப்பு மற்றும் இந்திய ஏ.ஐ. மாதிரிகளுடன் கூடிய முழுமையான ஏ.ஐ. திறன்களை பெருநிறுவனங்களுக்கும், பொது அமைப்புகளுக்கும் கொண்டு சோ்ப்பதில் நாங்கள் மிகுந்த உற்சாகமடைகிறோம்’ என சா்வம் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனா் பிரத்யுஷ் குமாா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments