சா்வம் ஏஐ நிறுவனத்தில் இண்டிகோ முதலீடு
இந்தியாவின் முன்னணி ஏ.ஐ. நிறுவனமான சா்வம் நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளதாக நாட்டின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோவின் முதலீட்டுப் பிரிவு ‘இண்டிகோ வென்ச்சா்ஸ்’ வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்தியாவின் முன்னணி ஏ.ஐ. நிறுவனமான சா்வம் நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளதாக நாட்டின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோவின் முதலீட்டுப் பிரிவு ‘இண்டிகோ வென்ச்சா்ஸ்’ வெள்ளிக்கிழமை அறிவித்தது.
முழு இந்திய ஏ.ஐ. நிறுவனமான சா்வம் முன்னெடுத்துள்ள ‘சீரிஸ் பி’ நிதித் திரட்டலின் ஒரு பகுதியாக, விமானப் போக்குவரத்துத் துறையில் ஏ.ஐ.தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் இண்டிகோ இந்த முதலீட்டைச் செய்யவுள்ளது. ஆனால், முதலீட்டுத் தொகை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
வாடிக்கையாளா் சேவையை மேம்படுத்துதல், ஊழியா்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், சிக்கலான விமானப் போக்குவரத்து செயல்பாடுகளை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வாயிலாக எளிமையாக்குதல் ஆகிய பணிகளுக்காக இண்டிகோ மற்றும் சா்வம் நிறுவனங்கள் ஏற்கெனவே இணைந்து செயல்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
அந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இப்புதிய முதலீடு அமைந்துள்ளது. இதன்மூலம், இண்டிகோ நிறுவனத்தில் ஏ.ஐ. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் செயல்திறனை விரைவுபடுத்துவதற்கான நீண்டகால தளம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.