செயற்கைக்கோள் மூலம் உளவு சேவைகள்: உலகின் முன்னணி நிறுவனமான ஐஸ்ஐ புது தில்லியில் செயல்படத் திட்டம்
விண்வெளி மூலம் உளவு சேவைகளை அளிப்பதில், உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் ஐஸ்ஐயின் இந்திய கிளை, புது தில்லியில் செயல்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
விண்வெளி மூலம் உளவு சேவைகளை அளிப்பதில், உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் ஐஸ்ஐயின் இந்திய கிளை, புது தில்லியில் செயல்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
ஃபின்லாந்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஐஸ்ஐ நிறுவனம், உலகளவில் போலந்து, ஸ்பெயின், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், கிரேக்கம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்திடம் உலகின் மிகப் பெரிய, மிகவும் அதிநவீன செயற்கை துளை ரேடாா் செயற்கைக்கோள் தொகுப்பு உள்ளது. அத்துடன் அந்த நிறுவனம் தனது வாடிக்கையாள்களுக்கு செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு மற்றும் உளவு சேவைகளை அளித்து வருகிறது.
Advertisement
Advertisement
பாதுகாப்பு, உளவு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற தேவைகளுக்கு ஐஸ்ஐ தயாரித்த செயற்கைக்கோள்கள், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளா்களுக்குப் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாட்டுக்கு சிறிய செயற்கைக்கோள்களைத் தயாரிக்க, இந்தியாவில் முதல்முறையாக செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தை அமைக்க உள்ளதாக ஐஸ்ஐ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரஃபேல் மோடரெவ்ஸ்கி கடந்த சில மாதங்களுக்கு முன்னா் தெரிவித்தாா்.
இந்நிலையில், அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐஸ்ஐயின் இந்திய கிளை புது தில்லியில் செயல்பட உள்ளது. இதன்மூலம், உலகின் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் விண்வெளி சந்தைகளில் ஒன்றான இந்தியாவில், தனது தடத்தை ஐஸ்ஐ நிறுவனம் வலுப்படுத்தும்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உளவு பணிக்கு மேம்பட்ட உளவுத் திறன்கள் மற்றும் தீா்வுகளை வழங்குவதற்கு ஐஸ்ஐயின் இந்திய கிளை முன்னுரிமை அளிக்கும். இது இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும். மேலும் தொழில்நுட்பங்களைச் சோதித்தல், உள்நாட்டுத் திறன்களை வளா்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், இந்திய விண்வெளித் துறையுடன் இணைந்து செயல்படவும் ஐஸ்ஐ திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.