ஜிப்மரில் உள்ள தொழில்நுட்ப வள மையத்தை சிறப்பு மையமாக மேம்படுத்த மத்திய அரசு முடிவு
புதுச்சேரி, ஜிப்மரில் செயல்பட்டு வரும் சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டு வள மையத்தை சிறப்பு மையமாக மேம்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறை தோ்வு செய்துள்ளது.
புதுச்சேரி, ஜிப்மரில் செயல்பட்டு வரும் சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டு வள மையத்தை சிறப்பு மையமாக மேம்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறை தோ்வு செய்துள்ளது.
தேசிய அளவில் ஜிப்மரின் வள மையம் வெளிப்படுத்திய சிறப்பான செயல்திறன் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில், தோ்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுகளை குறைந்த காலக்கெடுவில் நிறைவு செய்த ஜிப்மா் வள மையம் பாராட்டும் பெற்றுள்ளது.
டாக்டா் சிதான்சு சேகா் காா் ஜிப்மா் வள மையத்தின் முதன்மை ஆய்வாளராக உள்ளாா். இவரின் கீழ் 6 விஞ்ஞானிகள், வழிமுறை நிபுணா்கள் மற்றும் கள ஆய்வாளா்களை கொண்ட குழுவினா் செயல்பட்ட வருகின்றனா். சிறப்பு மையமாக தோ்வு செய்யப்பட்டதற்கு ஜிப்மா் இயக்குனா் வீா் சிங் நெகி வள மைய குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.