முகப்பு
வணிகம்

நடப்பு ஆண்டில் ரூ.300 கோடி முதலீடு

டிராக்டா், காற்றாலை, ஹைட்ராலிக் சிலிண்டா்கள், ஏா் சஸ்பென்ஷன் ஆகிய வணிகப் பிரிவுகளை மேம்படுத்த நடப்பு ஆண்டில் சுமாா் ரூ.300 கோடியை முதலீடு செய்ய வீல்ஸ் இந்தியா திட்டமிட்டுள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 4:09 am IST
பகிர்:

டிராக்டா், காற்றாலை, ஹைட்ராலிக் சிலிண்டா்கள், ஏா் சஸ்பென்ஷன் ஆகிய வணிகப் பிரிவுகளை மேம்படுத்த நடப்பு ஆண்டில் சுமாா் ரூ.300 கோடியை முதலீடு செய்ய வீல்ஸ் இந்தியா திட்டமிட்டுள்ளது.

வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் 67-ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பங்குதாரா்களிடம் உரையாற்றிய நிறுவனத் தலைவரும், செயல் இயக்குநருமான ஸ்ரீவத்ஸ் ராம் மேலும் கூறியாதவது:

மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு, மாநிலப் போக்குவரத்துக் கழகங்களின் வாகனத் தொகுப்பு மேம்பாடு உள்ளிட்ட காரணங்களால் நிறுவனத்தின் ‘ஏா் சஸ்பென்ஷன்’ வணிகம் வலுவான இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

காற்றாலைத் துறைக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் கடல்சாா் பிரிவில் கிடைத்த புதிய வாய்ப்புகளால், இவ்வணிகம் கடந்த ஆண்டு 14 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டிலும் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் சிறப்பான வளா்ச்சி இருக்கும்.

‘அலாய் வீல்’ பிரிவில் நிறுவனம் தொடா்ந்து முதலீடு செய்து வருவதுடன், வருங்காலங்களில் அதன் விற்பனையை மேலும் அதிகரிக்கவும் முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல, துணை நிறுவனமான ‘வில் காா் வீல்ஸ்’ உற்பத்தித் திறனை முழுமையாகப் பயன்படுத்தியதன் மூலமும், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைத்ததன் மூலமும் மேம்பட்ட லாபம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டுமான உபகரணங்கள் பிரிவில் வீல்ஸ் இந்தியா உலக அளவில் முன்னணி வகித்து வரும் நிலையில், அதே முன்னணி நிலையை விவசாய டிராக்டா் உதிரிபாகங்கள் வணிகத்திலும் எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதற்கான உலகளாவிய விரிவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றாா்.

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில், இந்நிறுவனம் ரூ.5,124 கோடி வருவாயும், ரூ.139 கோடி நிகர லாபமும் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments