ஏஐ செயலிகள் சரி; அது என்ன ஏஐ கணினிகள்?
செய்யறிவு தொழில்நுட்பங்களை வன்பொருளாகக் கொண்ட ஏஐ கணினிகள் பற்றி...
செய்யறிவு தொழில்நுட்பங்களை வன்பொருளாகக் கொண்டு ஏஐ கணினிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன .
ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு செய்யறிவு தொழில்நுட்பம் அறிமுகமாகி தொழில்நுட்பம்சார் வேலைகளை எளிதாக்கி வந்தாலும் அதில் சில விவாதங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும், தற்போது உலகளவில் கோடிக்கணக்காக பயனர்களை செய்யறிவு தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளன.
தற்போதுள்ள காலகட்டத்தில் கோடிங், ப்ரோகிராமிங், எடிட்டிங், டெவலப்பிங் போன்ற பல்வேறு வேலைகளில் பெரும்பாலும் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில நிறுவனங்கள் செய்யறிவு பயன்படுத்துவதை தவிர்த்தாலும் பல நிறுவனங்கள் அதனை ஊக்குவிக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில் சந்தையில் விற்பனையாகி வருவதுதான் செய்யறிவு கணினிகள். அதாவது, பெரும்பாலும் நாம் செய்யறிவிடமிருந்து தகவல்களைப் பெறவோ அல்லது அதில் வேலை செய்யவோ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம். இதனால் நம்முடைய தகவல்களின் பாதுகாப்புகள் கேள்விக்குள்ளாகின்றன. ஆகையால், செய்யறிவு சார்ந்த வசதிகளை அடங்கிய வன்பொருள் கொண்டு வடிவமைக்கப்பட்டதுதான் ஏஐ கணினிகள்.
இதில் உள்ள என்.பி.யு (NPU - Neural Processing Unit) எனும் சிப், கிளவுட் (Cloud) சேவையை நம்பாமல், செய்யறிவு பணிகளை மிக வேகமாகவும், பாதுகாப்பாகவும், குறைந்த மின்சாரத்திலும் நேரடியாக சாதனத்திலேயே செயல்படுத்த உதவுகிறது.
தற்போது சந்தையில் விற்பனையாகி வரும் ஏஐ கணினிகளில் வசதிகள் குறைவாகத்தான் உள்ளன. தொழில்நுட்பங்கள் வளர வளர ஏஐ கணினிகளில் வசதிகள் அதிகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Many leading computer manufacturing companies are selling AI computers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.