முகப்பு
வணிகம்

டெவலப்பர்களின் பணிகளை பறிக்குமா கோடெக்ஸ் மைக்ரோ?

செய்யறிவு நிறுவனமான ஓபன்ஏஐ-ன் கோடெக்ஸ் மைக்ரோ வன்பொருள் பற்றி...

Updated On : 30 ஜூன் 2026, 6:10 pm IST
ஓபன் ஏஐ - பிரதிப்படம்
பகிர்:

பிரபல செய்யறிவு நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI), கோடெக்ஸ் மைக்ரோ (Codex Micro) என்ற தனது வன்பொருளை அறிமுகப்படுத்த உள்ளது.

ஓபன் ஏஐ என்பது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு முன்னணி செய்யறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் செய்யறிவு சாதனமான சாட் ஜிபிடி உலகளவில் 100 கோடிக்கும்அதிகமான மாதாந்திரப் பயனர்களைக் கொண்டு, மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணி செய்யறிவு தொழில்நுட்பமாக உள்ளது.

Advertisement

Advertisement

இந்த செய்யறிவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்ததிலிருந்து லட்சக்கணக்கான பணியாளர்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலையிலிருந்து நீக்கி வருகிறது. மேலும், செய்யறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்தவே பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாகவும் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக தெரிவிக்கின்றன.

அதிலும் குறிப்பாக சில நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை செய்யறிவு தொழில்நுட்பத்தில் திறன்களை வளர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்துகிறது.

இந்த நிலையில், டெவலப்பர்கள் மற்றும் ப்ரோக்ராம்மர்களின் வேலைகளை சுலபமாக்க ஓபன் ஏஐ நிறுவனமானது, கோடெக்ஸ் மைக்ரோ என்ற வன்பொருளை வரும் ஜூலை 15 முதல் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த கோடெக்ஸ் மைக்ரோ என்ற வன்பொருள் டெவெலப்பர்களுக்குத் தேவையான ஷார்ட்கட்களை மிக வேகமாக இயக்குவதாகவும், இது அவர்களின் பணிகளை சூலபமாக்க உதவும் என்றும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே, செய்யறிவால் வேலைவாய்ப்புகள் பறிபோயிக் கொண்டிருக்கும் நிலையில் இதுமாதிரியான தொழில்நுட்பங்கள் மேலும் வேலைவாய்ப்புகளை குறைக்கும் என்ற அச்சமும் பணியாளர்களிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

OpenAI, the renowned artificial intelligence company, is set to launch its hardware named Codex Micro.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments