சாம்சங் கேலக்ஸிக்கு ரூ.45,000 தள்ளுபடி! அமேசானில் கிடைக்கும் இந்த வார சலுகைகள் என்னென்ன?
அமேசான் இணைய விற்பனை தளத்தில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து...
அமேசான் இணைய விற்பனை தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனுக்கு ரூ.45 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி இன்னும் பல முன்னணி நிறுவனங்களின் புகழ் பெற்ற பிராண்டுகளின் விலையும் அமேசானில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் இணைய விற்பனை தளமான அமேசான், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான சலுகைகளை இந்த வாரம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த 4 ஆம் தேதியில் இருந்து பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பொருள்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்போனுக்கு அதிகபட்சமாக ரூ.45,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ. 1,29,999. தற்போது அமேசான் சலுகை விலையாக ரூ. 84,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐபோன் 16 ஸ்மார்ட்போனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை ரூ. 79,999. அமேசானில் சலுகையுடன் ரூ. 62,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் பயனர்கள் ரூ. 18,100 ஐ சேமிக்க முடியும்.
ஐபோன் 17 ப்ரோவுக்கு ஆப்பிள் நிர்ணயித்துள்ள விலை ரூ. 1,89,000. அமேசானில் ரூ. 10,000 சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 1,79,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஹெச்பி நிறுவனத்தின் விக்டர் மடிக்கணினிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை ரூ. 95,746. அமேசானில் ரூ. 85,990-க்கு விற்பனையாகிறது.
Rs. 55,000 discount on Samsung Galaxy What smartphone offers are available on Amazon
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.