முகப்பு
வணிகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலலவரம் (ஜூலை 7)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Updated On : 7 ஜூலை 2026, 9:54 am IST
தங்கம் விலை - படம்: IANS
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 7) சவரனுக்கு ரூ. 1,280 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கம் முதலே உயர்ந்த வண்ணம் இருந்தது. ஜூலை 1-இல் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 1,06,000-க்கும், ஜூலை 2-இல் சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்து ரூ. 1,08,400-க்கும், ஜூலை 3-இல் சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்து ரூ. 1,09,600-க்கும் விற்பனையானது.

ஜூலை 4, 5 தேதிகளில் மாற்றமின்றி விற்பனையான நிலையில், வாரத்தில் முதல் நாளான திங்கள்கிழமை விலை சற்று குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 140 குறைந்து ரூ. 13,560-க்கும், சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ரூ. 1,08,480-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 7) சவரனுக்கு ரூ. 1,280 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,07,200-க்கும் கிராமுக்கு ரூ. 160 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,400-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

The price of ornamental gold in Chennai has decreased by Rs. 1,280 per sovereign today (July 7).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments