ஏற்கனவே இருக்கும் கார்களை இ-30 எரிபொருளுக்கு ஏற்ப மாற்ற முடியுமா?
ஏற்கனவே இருக்கும் கார்களை இ-30 எரிபொருளுக்கு ஏற்ப மாற்ற முடியுமா என்பது குறித்து
தற்போதைய எரிபொருள் மாற்றத்தில் இ-30 எரிபொருளுக்கு ஏற்ப, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கார்களில் தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொள்ள இயலாது என்று இந்தியாவின் பிஎம்டபிள்யு நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
எத்தனால் கலப்பு (Ethanol blending) என்பது நாட்டில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் மீண்டும் சீரடையத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வந்தாலும், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நீடித்த அமைதி நிலவுவதற்கான வாய்ப்புகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
Advertisement
Advertisement
எப்போது வேண்டுமானாலும் மீண்டும் போர் தொடங்கலாம் என்ற நிலையே உள்ளன. இத்தகைய சூழலில், பல நாடுகள் தங்கள் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான புதிய வழிகளை ஆராய்ந்து வருகின்றன.
இந்தியாவில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இ20 எரிபொருள், எண்ணெய் இறக்குமதிக்கான செலவைக் கணிசமாகக் குறைக்க உதவியிருக்கும் நிலையில், அடுத்தக் கட்டம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் மேலும் குறைக்க, அதிக எத்தனால் கலவை கொண்ட எரிபொருட்களைப் பயன்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
'ஃப்ளெக்ஸ்-ஃப்யூவல்' (flex-fuel) தொழில்நுட்பம் கொண்ட இ85 அல்லது இ100 எரிபொருட்களைப் பயன்படுத்துவதே நீண்ட கால இலக்காக இருந்தாலும், குறுகிய மற்றும் நடுத்தர காலத் தீர்வுகளாக இ22, இ25, இ27 மற்றும் இ30 போன்ற கலவைகள் கொண்டுவரப்படலாம். ஆனால், தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் (குறிப்பாக இ20 அல்லது அதற்கும் குறைவான கலவைக்கு ஏற்றவை) அதிக எத்தனால் கலவை கொண்ட எரிபொருள்களில் இயங்குவதற்கான வாய்ப்பு குறைவு.
எனவே, தற்போதைய கார்களில் இ30 எரிபொருளைப் பயன்படுத்தும் வசதியைச் சேர்க்க முடியுமா, தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியமா என்பது குறித்து இந்தியாவின் பிஎம்டபிள்யு குழுமும் அளித்த பதிலில், அத்தகைய சாத்தியக்கூறு இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது.
புதிய வகை எரிபொருள்கள் தற்போதுள்ள வாகனங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். ஏற்கனவே இந்திய சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான வாகனங்கள் ஒரு பத்தாண்டுக்கும் மேல் பழமையானவை என்பதாலும், அவை இ20 கலவையைக் கூட ஆதரிக்காதவை என்பதாலும் முதலில், அவை இ20 எரிபொருளை ஏற்குமா என்பதே ஆய்வுக்குள்படுத்தப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.
மேலும் புதிய தொழில்நுட்பத்தை பழைய கார்களில் மேம்படுத்துவது என்பது இயலாது காரியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.