எத்தனால் கலப்பினால் பெட்ரோல் டேங்குகளை மொய்க்கும் எறும்புகள்! உண்மை என்ன?
எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்ப்பதாக வெளியான விடியோ உண்மை இல்லை என மறுப்பு.
இ20 பெட்ரோல் எனப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட காரின் டேங்கு மூடிப் பகுதியை எறும்புகள் சூழ்ந்திருப்பது போன்ற விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாகியிருந்த நிலையில், பாரத் பெட்ரோலியம் இது குறித்து உண்மையை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் இ20 என்ற எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற கூற்றுகள் வெளியாகி வந்தன.
ஆனால், திடீரென, காரின் பெட்ரோல் டேங்க் மூடி மீது ஏராளமான எறும்புகள் சூழ்ந்திருப்பது போன்ற விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாகவே எறும்புகள் மொய்ப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
அதில் உண்மையில்லை, பொய்யான தகவலை பரப்பும் விடியோ என்று பாரத் பெட்ரோலியம் விளக்கம் கொடுத்துள்ளது.